என் மனதிலிருந்து.........
உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர் கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்ல வேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன
ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்
இருந்தும் என்னால் பேச முடியவில்லை.
ஏன்??????
துயரங்களை மனதில் அடக்கிக்கொண்டு
இவ் உலகத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றேன்
எனக்கும் ஒரு காலம் வரும்
ஒரு வசந்தம் பிறக்கும் என்ற நம்பிக்கையில்........
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர் கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்ல வேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன
ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்
இருந்தும் என்னால் பேச முடியவில்லை.
ஏன்??????
துயரங்களை மனதில் அடக்கிக்கொண்டு
இவ் உலகத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றேன்
எனக்கும் ஒரு காலம் வரும்
ஒரு வசந்தம் பிறக்கும் என்ற நம்பிக்கையில்........
No comments:
Post a Comment